27.7 C
Tamil Nadu
28 May, 2023
IndiaPoliticalSrilankaTamilnaduViral

அவ்வை நடராஜன் உடல் வழியாகத்தான் மறைந்துள்ளார் தமிழ் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் – கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான அவ்வை நடராஜன் 85 ஆவது வயதில் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார்.அண்ணா நகரின் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக திமுக எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கவிஞர் வைரமுத்து, மதன்கார்க்கி உள்ளிட்டோர் அதி காலையில் அஞ்சலி செலுத்தினர் பின்னர்

அரசு சார்பில் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்…

மேலும் திராவிட கழக செயல்பாட்டாளரும் வழக்கறிமான அருள்மொழி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கவிஞர் அவ்வை நடராஜன் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர் என புகழாரம் சூட்டினார்..

மதிமுக கட்சியின் நிறுவனர் வைகோ 8 8 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார்…

அஞ்சலி செலுத்திய பின்னர் வைரமுத்து பேட்டி :

அவ்வை நடராஜன் உடல்வழியாகத்தான் மறைந்துள்ளார் ஆனால் தமிழால் அவரின் சேவையால் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

தனது வாழ்நாளில் 70 ஆண்டு காலம் அவர் தமிழோடு பயணித்து தமிழுக்கு பணியாற்றியுள்ளார்

See also  அரசு பொது ஏலத்தில் டெண்டர் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய மர்ம நபர் - நாமக்கல்லில் பரபரப்பு

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம் கூட சமநிலையில் பேசுபவர் அவர் இரண்டு மொழிகளிலும் புலமை மிக்கவர் அவர்

பொதுவாக தமிழ் படித்தவர்கள் நிர்வாகத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பார்கள் ஆனால் தமிழ் சமூகத்தில் இருந்து அப்படிப்பட்ட மூடநம்பிக்கையை பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றியதன் மூலம் உடைத்தெறிந்தவர் தமிழறிஞர் அவ்வை நடராஜன்

மூன்று முதலமைச்சர் அவர்களோடு இணக்கமாக பழகி பணியாற்றியுள்ளார்…

அமைச்சர்கள் மாறும்போது முதலமைச்சர்கள் மாறும் போதும் தமிழ் தான் எனக்கு முக்கியம் என்று தமிழை முன்னுறுத்தினார்..

தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே உள்ளது என்ற ஆதங்கம் அனைவருக்கும் உள்ளது என்றும்,

ஆகவே மறைந்த தமிழ் அறிஞர்களின் பெருமையை புதிய தலைமுறைக்கு நினைவூட்ட நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்..

நாங்கள் மதம் பார்த்து மொழி பார்த்து பழகுவதில்லை தமிழரா தமிழ் உணர்வு இருக்கிறதா என்று தான் பழகுவோம்.

இளம் தலைமுறை அனைவரும் முழுக்க தமிழில் உரையாடுவதே மறைந்த தமிழர்கள் செய்யும் அஞ்சலி என தெரிவித்தார்..

மறைந்த முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன்திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழறிஞர் ஒளவை துரைசாமி- லோகாம்பாள் ஆகியோருக்கு மகனாக 1936-ம் ஆண்டு பிறந்தவர் அவ்வை நடராஜன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஆய்வுகள் மூலம் முனைவர் பட்டம் பெற்றார்.

See also  அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்..!

மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். டெல்லியில் அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் பணிகளை ஏற்றார்.

1975-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராக பணியாற்றினார். 1984-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் அரசு துறை செயலராக முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராஜன்.

1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார் 2014-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உடல் மாலை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படுகிறது..

Related posts