கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு நியாயம் கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று காலை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.
ஆனால், சமுதாய நலக் கூடத்தில் போதுமான கழிப்பறை மற்றும் மின்விசிறி வசதி இல்லை என மாதர் சங்கத்தினர் மீண்டும் சாலைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மர்ம மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் கலந்து கொண்டார் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சிறுமதியின் தாய் தமிழக முதல்வரிடம் நாங்கள் முறையிட்டும் எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்றும்
தமிழக முதலமைச்சர் இடம் நாங்கள் பேசும் போது அமைச்சர் எ.வா வேலு குற்றவாளிகளுக்கு சாதகமாக பேசியதாகவும் நீதிமன்றத்தைத் தான் நீங்கள் நாட வேண்டும் என்று எங்களிடம் கூறியும் குற்றவாளிகளுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறார்.
மேலும், அவர் அந்த பள்ளியை விலைக்கு வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வருவதாக அவர் கூறினார் மேலும் ஸ்ரீமதி மரணத்தில் இதுவரை எந்தவிதமான வழக்கு பதிவும் செய்யவில்லை என்றும் ஜிப்மர் அறிக்கை மற்றும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ பதிவுகள் போன்றவை எதுவும் எங்களுக்கு கொடுக்கவில்லை என்றும் பள்ளியில் நடந்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றார்.