திமுக அரசு மத்திய அரசை குறை சொல்லிவிட்டு இவர்கள் எதற்கெல்லாம் விலையை ஏற்ற முடியுமோ அதற்கெல்லாம் விலையை ஏற்றி வருகிறார்கள்.அதில் ஒன்றுதான் பால் விலை என உயர்வு என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்
கப்பலோட்டிய தமிழர் வ.உ சிதம்பரனார் அவர்களின் 86 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்
கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 86 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை
சுதேசி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் வ உ சி .அவர்களின் கோட்பாட்டை முன்னெடுக்க வேண்டும் மத்திய அரசும் மாநில அரசும் அனைவருக்கும் கொண்டு செல்லும் வழியில் மிகப்பெரிய விழாவாக கொண்டாட வேண்டும்.பாடத்திட்டத்தில் சிறிதாக உள்ள வரலாறை பெரிதாக கொண்டு வர வேண்டும்.
திமுக அரசு மத்திய அரசை குறை சொல்லிவிட்டு இவர்கள் எதற்கெல்லாம் விலையை ஏற்ற முடியுமோ அதற்கெல்லாம் விலையை ஏற்றி வருகிறார்கள்.அதில் ஒன்றுதான் பால் விலை.அரசை குறை சொல்லி தான் ஆக வேண்டும். விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் மக்களை பாதிப்பு தான் ஏற்படுத்தும். கடந்த ஒரு வார காலமாக மழை பெய்தது ஆனால் எங்கேயும் தண்ணீர் தேங்க வில்லை என்ற மாய பிம்பத்தை தான் உருவாக்கினார்கள் ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை மக்களை அவர்களின் தேவைக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் என்றார்.