சென்னையில் கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு பழைய கட்டிடங்கள் இடித்து புதிதாக கட்டவில்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் புதிதாக கட்டும் வரை வெளியில் வாடகையில் இருக்க 8 ஆயிரம் ரூபாயை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது திமுக அரசு என்றார்.
270 சதுர அடியில் இருந்து 420 சதுர அடியாக உயர்தப்பட்டுள்ளது.
13 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள குடியிருப்பிற்கு 7.5 லட்சம் ரூபாய் மாநில அரசும், மத்திய அரசு 1.5 லட்சம் ரூபாய் வழங்குகிறது. மீதமுள்ள 4.5 லட்சம் ரூபாய் வீட்டில் வசிப்பவரே செலுத்த வேண்டும் என விதி, ஆனால் 1.5 லட்சம் ரூபாய் செலுத்தினாலே போதும் என திமுக அரசு கொண்டு வந்துள்ளது.
280 கோடி மதிப்பில் 1.60 லட்சம் வீடுகள் மாநில முழுவதும் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.