பெரும்பாலாக தற்போது பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற மனம்போக்கு தான் மக்களின் மத்தியில் நிலவுகிறது அதில் ஒரு படி கூடுதலாக அரசு பேருந்து நடத்துனர்கள் தற்போது பெரும்பாலும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.
அதற்கு மக்கள் பத்து ரூபாய் நாணயங்களை மீதி சில்லறையாக கொடுக்கும் போது வாங்க மறுக்கின்றனர் .எனவே ,நாங்களும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதை நிறுத்தி விட்டோம் என காரணம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,மாநகர பேருந்துகளில் பயணச் சீட்டுக்காக 10, 20 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கும் போது அதனை வாங்க மறுப்பதாக நடத்துனர்கள் மீது புகார் எழுந்தது.
ஆகவே,10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச் சீட்டை வழங்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.