ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பில் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான அணியினர் அவரது வழிகாட்டலின் அடிப்படையில் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே இளங்கோவன் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் சுமார் 39.5 சதவீதமாக கீழ் பெற்று முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 24.5% பெற்று இரண்டாம் இடத்திலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 9.5% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தனர் மேலும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் கல்வி ,தொழில் , ஜாதி பாலினம் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளரை முன்னிலையில் உள்ளார் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளனர்.