தமிழ்நாடு மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று காலை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பழனிவேல் தியாகராஜன், சட்டமன்றத்தின் கடைசி நாள் இன்று நடைபெறும் நிலையில், அதற்கான நிகழ்வுகளில் பங்கேற்க நேரமானதால் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட அவர், விமான நிலையத்திலிருந்து ஓமந்தூரார் தோட்டம் வரை பயணித்து தலைமைசெயலகத்தை வந்தடைந்தார். இருப்பினும் தன்னோடு மெட்ரோ ரயிலில் அமர்ந்து வந்த பயணிகளிடம் கலந்துரையாடி வந்தார், இதனுடன் அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்து வந்தார் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
இதனிடையே தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மெட்ரோவில் பயணித்த புகைப்படங்கள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.