திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சுரில் , அத்திபட்டு என்னும் ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 1200 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே முதல் யூனிட்டினுடைய மூன்றாவது அலகில் , கோதிகலன் குழாயில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து உழியர்கள் கொதிகலன் குழாயின் கோளாறுகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மூதல் யூனிட்டின் மூன்றாவது அலகில் உண்டான கொதிகலன் கசிவை சரிசெய்ததன் பின்னதாக இன்று மீண்டும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மேலும் தெரிவித்துள்ள தகவலானது மின்சார உற்பத்தி தொடங்கியதுடன் முதற்கட்டமாக 110 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்கப்பட்டு, படிப்படியாக மின் உற்பத்தியை அதிகப்படுத்தி இறுதியில் தனது முழுத்திறனையும் அடையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
previous post