26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
NewsTamilnadu

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது!

நாகையில் இருந்து மீன்பிடிப்பதற்காக 40 க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் சில படகுகள் எல்லைத்தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறி 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.


மேலும் கைது செய்த 11 தமிழக மீனவர்களை இலங்கை பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியானது . அதனை தொடர்ந்து எல்லைத்தாண்டி மீன் பிடித்தற்கான குற்றத்தின் அடிப்படையில் கைதான 11 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

See also  அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்! - டி.ஜி.பி சைலேந்திர பாபு பாராட்டு!!

Related posts