தென்சென்னை தொகுதிகளின் மக்களவை உறுப்பினராக இருந்து வரும் தமிழச்சி தங்கப்பாண்டியன் , இந்தியாவில் பிறந்திருக்கும் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா என, நாடளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக தென்சென்னை தொகுதிகளின் உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையின் கேள்வி நேரத்தின் பொழுது, இனப்படுகொலை காரணமாக இலங்கையில் இருந்து பல பேர் இந்தியாவிற்கு அகதிகளாக வருகை புரிந்து முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே கருப்பு ஜூலையின் பொழுது, இலங்கையில் இருந்து திருச்சி அகதிகள் முகாமிற்கு வந்திருந்த கே. நளினி என்பவருக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தோர்களின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா ? இது குறித்த திட்டம் ஏதேனும் வைத்துள்ளீர்களா என மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் பல கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ. முரளிதரன் பதிலளித்ததாவது, இந்த விவகாரம் தொடர்பான விவாதங்களை திமுக உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியனை பின்னர் சந்தித்து பேசுவதாக மக்களவையில் உறுதியளித்திருக்கிறார்.