27.7 C
Tamil Nadu
28 May, 2023
IndiaNewsTamilnadu

சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – தமிழக அரசு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், (17ம் தேதி) நாளை தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு ULTRA DELUXE அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் மற்றும் சாதாரண NSS சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் அதிக அளவில் பயணம் செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்குவதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

See also  "செட்டாப் பாக்ஸ் பிரச்சனையை விரைவில் தீர்க்க நடவடிக்கை"

மேலும் 30 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக www.tnstc.in. மற்றும் TNSTC official app இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகள் குறித்த தகவல்களை மக்கள் பெறுவதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது 9445014452, 9445017793, 9445014424, 9445014463, 9445014416 இந்த எண்களில் மக்கள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts