வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக நிதி அமைச்சர், எந்தெந்த துறைக்கு எவ்வளவு கடன்கள் உள்ளதை ஏன் வெளியிடவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாமை நாம் தமிழர்
கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், கொசு வலை வழங்கும் திட்டம் என்பதை தவறுதலாக கூறிய மேயரை விமர்சிப்பது தவறு என்றும் 50, 60 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர்களே தடுமாறும் போது எளிய நிலையில் இருந்து வந்துள்ள அவரை விமர்சிப்பது சரியாக இருக்காது
என்றும் வேலை செய்யும் அவரை விமர்சிக்க கூடாது எனவும் கூறினார்.
வாரிசு திரைப்படம் தடுப்பது உதயநிதி ஸ்டாலின் தான் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி கூறியதை மறுத்த சீமான், உதயநிதி அப்படிப்பட்ட ஆள் இல்லை என தெரிவித்தார். மேலும் திரைப்படம் தெலுங்கில் வெளியாக விட்டால் களத்தில் இறங்கி போராட தான் செய்வோம் என அறிவித்தார்.
கட்சிகள் மாறினாலும் மாற்றங்கள் ஏதுமின்றி ஊழல் லஞ்சம் விலையேற்றம் போன்ற அதே
அவல நிலைதான் தொடர்கிறது எனவும் இனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என
பேசினார். சாலை குழிகள் சவ குழிகளாக இருப்பதாக குற்றம் சாட்டிய சீமான், நிதிஅமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கடன் அறிவித்தாரே தவிர எந்தெந்த
துறையில் எவ்வளவு கடன் என வெளியிடாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.