முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ள நிலையில் கேரளாவிற்கு இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக தமிழக – கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளது.
எனவே, கேரளாவின் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து,உப்புதரா, உள்ளிட்ட முல்லைப் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறை விடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பு தற்போது 7396 மில்லியன் கன அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 1166.25 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 511 கன அடியாகவும் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.