முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாட்டின் 35 வது அமைச்சராக உதயநிதிஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதுடன் பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். செய்தியாளார்களை சந்தித்த அவர் இனி நடிக்கப்போவதில்லை எனவும், மாமன்னன் தான் என்னுடைய திரைப்பயணத்தில் கடைசி படமாக இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தார். அதனுடன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருந்த புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கான சூழல் தற்போது இல்லை, அதனால் அத்திரைப்படத்தில் இருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டது முதல் பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சந்தானமும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி நடிப்பில் வெளியாகி இருந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் இணைந்தவர்கள் தான் சந்தானமும், உதயநிதி ஸ்டாலினும். இத்திரைப்படத்தை தொடர்ந்து வெளியான அடுத்தடுத்த படங்களில் இருவரது கூட்டணியும் மக்களுக்கு பிடித்தவையாக இருந்தது.
அதற்கடுத்து நடிகர் சந்தானம் நகைச்சுவையை விட்டு விலகி ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் காரணமாக பல படங்களில் இவர்களதுன் கூட்டணி அமையாமலே இருந்தது. தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில் ஜெயிக்கனும்
! இனி இந்த கனவு தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துக்கள் முதலாளி என பதிவிட்டிருக்கிறார்.