மாண்டஸ் புயல் காரணமாக மதுரை – சென்னை வாராந்திர சிறப்பு பேருந்துகளும், டெல்டா மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வார இறுதியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதும் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் மதுரை மண்டலத்தில் இருந்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 20 பேருந்துகளும் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மறு உத்தரவு வரும் வரை இப்பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.