தேர்தல் வாக்குறுதிகளை சொன்னது போல் நிறைவேற்றி வருகிறோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கூட்டத்தொடரில் தெரிவித்தது போல் 50,000 விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு அரசாணையை வருகின்ற 11 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என தெரிவித்தார். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சொன்னது சொன்னது போல நிறைவேற்றி வருகிறோம்.
கரூரில் வரும் 11 ஆம் தேதி 20,000 பேர் முதலமைச்சர் கையில் ஆணையை பெறுகிறார்கள். மீதம் உள்ள 30,000 பேருக்கு படிப்படியாக ஆணைகள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். நீண்ட நாட்களாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆணைகள் வழங்கப்படுவதாகவும், முன் பதிவு செய்ததன் அடிப்படையில் இலவச மின் இணைப்புக்கான அரசாணை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். யாரும் நம்ப முடியாத இந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.