பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசியவர்
பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு (EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், மூன்று நீதிபதிகள் ஆதரவ தீர்ப்பு அளித்து உள்ளனர் இரண்டு பேர் செல்லாது என்று கூறியுள்ளனர்.இது சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது.
இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
அனைத்து சமூகத்திலும் பொருளாதாரத்தில் நழிவடைந்தவர்கள் உள்ளனர். ஆனால், உயர் சாதியில் மட்டுமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் சமூக நீதி கோட்பாடு பின்பற்ற படவில்லை. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை தாண்டி ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய உள்ளோம்
இதை எதிர்த்து போராட வேண்டிய பொறுப்பு குறிப்பாக ஓபிசி சமூகத்தினருக்கு உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இட ஒதுக்கீடானது 50 சதவீதத்திற்கு மேலாக செல்லக்கூடாது ஆனால் இந்த இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி .இதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம்.
இது வறுமையில் வாடக்கூடியவருக்கு வழங்கப்படுகிற நீதி அல்ல .
சனாதனவாதிகள் எல்லா துறைகளிலும் நிறைந்துள்ளார்கள் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு சான்று
ஆயிரம் சதுர அடியில் வீடு வைத்திருப்பவர்களையும் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களையும் மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஈட்டுபவர்களை எவ்வாறு ஏழை எளியவர் என்று மத்திய அரசு வரையறை செய்கிறது என கேள்வி எழுப்பினார்.
பொருளாதார அளவுகோல் என்று சொல்லிவிட்டு சாதியை தான் அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் இந்திய நாட்டின் சூழலுக்கு இந்த தீர்ப்பை பொருத்திப் பார்த்து அதன் பின்புலத்தை அறிந்து கொண்டு தங்களது நிலைப்பாட்டை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.