27.7 C
Tamil Nadu
28 May, 2023
IndiaNewsPolitical

ஆடை அணியாத பெண்கள் அழகானவர்கள் – ராம்தேவ் பாபாவின் சர்ச்சை கருத்துக்கு மகளிர் அணி நோட்டீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாட்களாகவே பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுகள் தான் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் யோகா குருவான ராம்தேவ் பாபா பெண்கள் குறித்தும், அவர்களது ஆடைகள் தொடர்பாகவும் பேசியிருந்தது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தானேயில் ராம்தேவ் பாபா தலைமையில் யோகா பயிற்சி கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கான பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றுள்ளது. யோகா பயிற்சி முடிந்தவுடன் , பொதுக்குழு கூட்டம் தொடங்கியதால் , பெண்களுக்கு யோகா உடையில் இருந்து புடவைகளுக்கு மாற போதிய நேரம் கிடைக்கவில்லை. ஆகையால் அதில் சிலர் யோகா உடைமைகளுடன் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையில் ராம்தேவ் பாபா , புடவை அணியாமல் வந்திருந்த பெண்களை பார்த்து , புடவை கட்ட நேரம் கிடைக்கவில்லை. இருப்பினும் பெண்கள் புடவை அணிவது நல்லது, அதுமட்டுமல்லாமல் பெண்கள் சல்வார் உடை அணிந்தாலும் அழகாக தான் இருப்பார்கள். சொல்லவேண்டுமானால் என் கருத்துப்படி பெண்கள் எதுவுமே அணியாவிட்டாலும் அழகாக தான் இருப்பார்கள் எனக் கூறியுள்ளார். இவரின் அநாகரீகமற்ற செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

See also  பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்துக்காக அதிக திரையரங்குகளை கேட்ட தயாரிப்பாளார்!

மேலும் ராம்தேவ் பாபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவும், முதல் மந்திரி தேவிந்திர பட்னாவிஸின் மனைவியும் கலந்து கொண்டனர். ராம்தேவ் பாபாவின் சர்ச்சை பேச்சுக்கு , மகளிர் அணி ஆணையம் அவரை வன்மையாக கண்டித்து , மூன்றே நாளில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ராம்தேவ் பாபாவிற்கு மகளிர் அணி அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், பெண்களின் கௌரவத்தையும், கண்ணித்தையும் கெடுக்கும் வகையில் அநாகரீகமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவரது சர்ச்சை கருத்துக்கு சட்ட மேலவை துணைத்தலைவரான நீலம் கார்கே, யோகா மூலம் நிதானம் மற்றும் ஆரோக்கியத்தை கற்றுத்தரும் குரு. அவரே இது போன்று பெண்களிடம் அநாகரீகமான முறைகளில் பேசியிருப்பது தவறானது என தெரிவித்திருக்கிறார்.

See also  அதிமுக எனும் கடலை, குட்டை போல் ஆக்கிவிட்டனர் - டிடிவி தினகரன் விமர்சனம்

Related posts