பிப்ரவரி 16ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள திரிபுராவில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
2023 ஆம் ஆண்டில் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளன.
முதலாவதாக தற்போது மூன்று வட கிழக்கு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களும் தலா 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளன
திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதியும் மேகாலயா, நாகலாந்தில் பிப்ரவரி 27ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்நிலையில் திரிபுராவில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த மனுதாக்கல் ஜனவரி 30ம் தேதி நிறைவடையும் நிலையில், 31ம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது.
மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாளாகும்..
அதேபோல பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்க உள்ள மேகலயா, நாகலாந்தில் வேட்புமனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடைகிறது
3 வடகிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலுக்காக மொத்தம் 9125 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்கிறது.
தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.