17 வயது கால் பந்து வீராங்கனை பிரியா வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக மேல் சிகிச்சைக்காக 08/11/2022 அன்று உள் நோயாளியாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய வலது காலில் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக முட்டிக்கு மேல் பகுதியிலிருந்து கால் அகற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இரத்த நாள சிகிச்சை நிபுணர்,எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,மயக்க மருத்துவர்,சிறுநீரகவியல் துறை நிபுணர் பொது மருத்துவ சிகிச்சை நிபுணர் அடங்கிய மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம்,ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் இன்று காலை 7:15 மணியளவில் இயற்கை எய்தினார்.