ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக அதிமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக 120 இடங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளது இதன் மூலம் திமுக ஜனநாயக படுகொலை செய்திருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் கடைசி கட்டத்தை நோக்கி வருவதால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.