அதிமுக கட்சி சிதறாமல் எடப்பாடி தலைமையில் வலுப்பெற்றுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களேஸ்வரி அம்மன்
மரகத நடராஜர் மற்றும் ஸ்ரீவராகி அம்மன் ஆகிய ஆலயங்களில் முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு திமுக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வேஷ்டி சேலைகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர் இது எந்த வகையில் நடக்கும் என்று தெரியவில்லை
எம்ஜிஆர் துவங்கிய அதிமுக கட்சி சிதறிவிட்டது என்பது தவறானது. சிதறாமல் தான் எடப்பாடியார் தலைமையில் சிறப்பாக உள்ளது
என தெரிவித்தார்.