அதிமுக பொது குழு வழக்கில் தேர்தல் ஆணையம் மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு. அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்திறப்பாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. கடந்த ஜூலை 13ம் தேதி நடந்த பொதுக்குழுவை அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி அது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க இன்னும் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம்.
previous post