27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsPoliticalTamilnadu

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு – கவிஞர் வைரமுத்து வாழ்த்து..!

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தமிழக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததின் அடிப்படையில் , தமிழ்நாட்டின் 35 வது அமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அமைச்சர் உதயநிதி அமைச்சராகப் போகிறார் என்ற செய்தியை அறிந்த நாள் முதலே, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில் ,

உள்ளங்கவர் உதயநிதி!

கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்

இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது

உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்

தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக

அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்!

See also  மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் - தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்த அமித்ஷா

என பதிவிட்டுள்ளார்.

Related posts