வெளிநாடு போன்ற சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை கூகுள் நிறுவனம் ஒளிப்பரப்ப கூடாது என, மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது.
அக்கடிதத்தில் பந்தய நிறுவனங்களின் விளையாட்டு விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக கூகுள் நிறுவனம் கைவிட வேண்டும். மேலும் இது குறித்த கடைசி ஆலோசனைகளுக்கு பின் டிவி சேனல்கள், ஓடிடி தளங்கள் போன்றவற்றில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருந்து வந்தது வரவேற்க தக்கதாக உள்ளது.
இதனிடையே யூடுயூப் மற்றும் கூகுள் போன்ற தளங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் தற்போது வரை நிறுத்தப்படாமல் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் விளம்பரங்களின் அளவு பெருகி வந்ததால் , விளம்பரங்கள் குறித்த குற்றச்சாட்டு எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே பணத்தை பணயமாக வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளின் விளம்பரங்கள் ஒளிப்பரப்புவதை மட்டும் கூகுள் நிறுவனம் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.