சபரிமலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆன்லைன் தரிசனம் இல்லை என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையை பொறுத்தவரையில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால் முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு மணி நேரத்தில் 4800 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை 76103 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
எனவே, அடுத்த 3 நாட்களுக்கு ஆன்லைன் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.