நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகளோடு கூடிய எர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தில் இதுவரை 32 பேர் பலியானதாக கண்டுபிடிக்கப் பட்ட நிலையில் 16 உடல்களை மீட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காத்மாண்டு பகுதியில் இருந்து 10:30 மணியளவில் புறப்பட்ட விமானம் ஓடு பாதையில் இருந்து விலகிய நிலையில் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் விமான நிலையத்தில் மீட்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க கடினமாக உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். இவ்விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் , பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
விமான விபத்தை தொடர்ந்து , நேபாள பிரதமர் புஷ்ப தமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
previous post