27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsWeather

சென்னையில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்

சென்னையில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 35 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாண்டஸ் புயலாக உருவாக வாய்ப்பு என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக
நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை அடையாறில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் 35 வீரர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

See also  வெண்ணிலா கபடி குழு பட நடிகர் காலமானார் !

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர 121 பன்னோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்கின்றன.

Related posts