ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு துவக்க விழாவையொட்டி , சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர், எம்ஜிஆர் குறித்து சில சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார். அதில் நான் மாணவராக இருந்த காலத்தில் பள்ளி நிதி பெறுவதற்காக எம்ஜிஆரை சந்திக்க சத்யா ஸ்டியோ செல்வேன். அவ்வப்போது எம்ஜிஆருடன் நெருங்கி பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படத்திற்கும் முதல் ஆளாக போவேன். அதனை அறிந்த அவர் என்னை அழைத்து படம் எப்படி இருந்தது என்றெல்லாம்
இதையடுத்து பேசிய அவர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வராக இருந்தவர் ஜானகி எம்ஜிஆர். அந்த பெருமைக்குரிய மதிப்பு என்றும் அவரையேச் சாரும். மேலும் எம்ஜிஆர் அரசியலில் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்பாக , திமுகவில் தான் அதிக காலம் இருந்தார். அவரை கருணாநிதி தேசிய இயக்கத்தில் இருந்து திமுகவிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னதாக திமுகவில் தான் அவர் அதிக நேரம் பணியாற்றினார். எம்ஜிஆரின் பங்களிப்பு திமுகவிற்கு தான் அதிகம். இதையடுத்து எம்ஜிஆர் ஜானகி கல்லூரி கட்டுவதற்கு அனுமதி அளித்து, அதற்கு துணையாக இருந்தவரும் கருணாநிதி தான் என்பதையும் குறிப்பிட்டு பேசினார். விழாவின் இறுதியில் கல்லூரி மாற்றுத்திறனாளிகளுக்காக வைக்கப்பட்ட கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றித்தருவதாகவும் கூறினார்.