விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தன் முதல் வெளியூர் பயணமாக திண்டுக்கள் சென்றுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக திண்டுக்கல் பொதுமக்கள் மட்டுமல்லாது ஏராளமான திமுக தொண்டர்களும் குவிந்து வந்துள்ளனர். மேலும் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழி முழுவதும் கொட்டும் பணி , இரவு என எதையையும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வந்தனர்.
அமைச்சராக பதவியேற்றதன் பின்னதாக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் வெளியூர் பயணம் என்பதால் கூடுதல் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலினுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோர் உடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.