26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
IndiaNews

விமான பயணத்தின் போது முகாகவசம் அணிவது கட்டாயம் மறுபரிசீலனை – மத்திய அரசு

கொரோனா வழிகாட்டு முறைப்படி விமான பயணத்துக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உள் மற்றும் வெளிநாட்டு விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்பதை விமானத்தினுள் அறிவிக்க வேண்டும், அதேபோல் விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் தொடர்பாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, அந்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சுகாதார அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்பது தொடர்பாக விமானத்தினுள் அறிவிப்பது என்பது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த அறிவிப்பிற்கு பதிலாக “பயணிகள் முகக்கவசத்தை அணிய வேண்டும் விரும்புவதாக” என்ற வாக்கியத்தை மட்டுமே குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது மேலும் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று விமானத்தினுள் அறிவிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசின் புதிய அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts