மதுரை: மாட்டுத்தாவணி காய்கறி கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தை இயங்கி வருகிறது
இச்சந்தையில் உள்ள 1,836 கடைகளில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 10,000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்
இச்சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,000 டன் வரை காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது
இந்நிலையில், மதுரை மாநகராட்சி இக்கடைகளின் வாடகையினை உயர்த்தியிருக்கிறது.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. 4 சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தால் 60 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருக்கிறது.
சில்லறை வணிகம், பழங்கள் விற்பனை கடைகள் மட்டும் வழக்கம் போல இயங்ககி வருகின்றன.