குஜராத் சட்டப்பேரவைக்கானத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குபதிவுகள் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பிரதமர் மோடியின் தாயார், ஹீராபென் மோடி அவர்கள் காந்திநகர் அருகே அமைந்திருக்கும் ரேசன் கிராமத்தில் போடப்பட்ட வாக்குசாவடியில் வாக்களிப்பதற்காக தங்களின் இளைய மகன் பங்கஜ் மோடியுடன் நாற்காலியில் அமர்ந்தபடி வருகைப் புரிந்தார்.
இதனிடையே பிரதமர் மோடியின் தாயார் சிறப்பாக தன்னுடைய வாக்குகளை செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அகமதாபாத் நகரில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி மையத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு, தன் தாயாரிடம் ஆசி பெற்றுக்கொண்டு புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.