குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக வாக்குகள் செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரு தேதிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று காலை வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை அதாவது 182 தொகுதிகளில் 157 தொகுதிகளின் வெற்றியை பாஜகவே கைப்பற்றியது. இதன் மூலம் பாஜக குஜராத்தில் தொடர்ந்து 7 வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.
இதனிடையில் குஜராத்தை மீண்டும் கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் அவர் , பதிவிட்டிருப்பதாவது, குஜராத் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக பிரதமர் மோடி அமோக வெற்றி பெற்றிருப்பது மாநிலத்தின் மீதும் மக்களின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை தெளிவுபடுத்தியிருக்கிறது. இதனை தொடர்ந்து வரலாற்று வெற்றியைக் கண்டதற்காக மனமார்ந்த வாழ்த்துகள் பாஜக எனவும் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.