விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழு மீட்பு உபகரணங்களுடன் விழுப்புரத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காக்குப்பம் மைதானத்தில் உள்ளவர்களை நேரில் சென்று ஆட்சியர் பார்வையிட்டடார்.
அப்போது பேட்டியளித்த ஆட்சியர், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் விடுப்பு ரத்து செய்யப்பட்டு 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், 1091 தற்காலிக நிவாரண முகாம்கள், 12 இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
புயலால் பாதிக்கப்படுவோர் 1077, 04146 223265, 7200151144 போன்ற எண்களில் தகவல் தெரிவித்தால் உடனடி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மழையின் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபடும் எனக் கூறினார்.