மாண் டாஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு காவல்துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் மாண்டாஸ் புயல் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை (9-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மீட்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.