உலகளாவிய பொருளாதாரத்தின் மந்த நிலையைத் தொடர்ந்து , உலகிலுள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஏற்கனவே உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் கூகுள், ட்விட்டர், ஸ்விக்கி, அமேசான் போன்ற நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எக்கச்சக்கமான பணியாளர்களை பணிநீக்கம் செய்து அறிவித்தது. தற்போது இதனடிப்படையில் இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகவும் முக்கியமானதாக கருத்தப்படும் விப்ரோ நிறுவனமும் தங்கள் பணியாளர்கள் 450 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பல தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில் , இது குறித்து விப்ரோ நிறுவனம் கூறியிருப்பதாவது, விப்ரோ நிறுவனத்திற்கென வாடிக்கையாளர்களிடையே உயர்வான மதிப்பீடு இருந்து வருகிறது, இதற்கு ஏற்றார் போல் பணிபுரியும் ஊழியர்களும் நிபுணத்துவத்துடன் இருப்பது அவசியமான ஒன்றாகும். இதற்காகவே பணியாளர்களுக்கு தனி பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது, இந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறாத பணியாளர்களை தான் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இதையடுத்து வரும் ஆண்டுகளில் கேம்ஸ்ட் இண்டர்வியூ எனப்படும் வளாக தேர்வு வாயிலாக பணியாளர்கள் தேர்வு தொடர்ந்து நடைபெற இருப்பதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் விப்ரோ நிறுவனம் வேலையை விட்டு நீக்கிய பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட வேலை நீக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, உங்கள் ஒவ்வொருவருக்கும் பயிற்சி வழங்க விப்ரோ நிறுவனம் ரூ.75 ஆயிரம் வரை செலவிட்டுள்ளாது, முறைப்படி இத்தொகையினை நீங்கள் தான் நிறுனத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் , ஆனால் நிறுவனம் இத்தொகையை தள்ளுபடி செய்கிறது. இதனை தொடர்ந்து விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இது போன்ற காரணங்களால் தான் பணத்தை செலவிட ஐடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றனர், இது போன்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்தால் ஐடி நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் விப்ரோ குறிப்பிட்டுள்ளது.
previous post