ஒடிஷா சுகாதாரத்துறை அமைச்சர் மறைவிற்கு இரங்கல். ஒடிசா மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்த நாபா தாஸ் நேற்று பிரஜா ராஜ் நகரில் நடைபெற இருந்த நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் அப்பொழுது காரில் இருந்து இறங்கும் பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால்தாஸ் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில் கொண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலே சரிந்து விழுந்தார் .
Odisha health minister Naba Kishore Das shot at by police ASI! pic.twitter.com/VZzIjyHm2N
— karthik gopinath (@karthikgnath) January 29, 2023
அமைச்சர் உடனடியாக முதல் உதவிக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வர் கொண்டு செல்லப்பட்டார் . தீவிர சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனளிக்காததால் நபோதாஸ் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்,,பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.