சுவாமி ஐயப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வழக்கமாக அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி அன்று மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதன்படி,
இந்த ஆண்டுக்கான கார்த்திகை 1-ந் தேதி இன்று பிறந்தது.இதையொட்டி காலையில் பக்தர்கள் குளித்துவிட்டு சந்தனம்,குங்குமம் திலகமிட்டு அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறப்பதற்கு முன்னதாக பக்தர்கள் வரத்தொடங்கினார்கள்.அதன் பிறகு அதிகாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் மாலை போட தொடங்கினார்கள்.பக்தர்கள் ஆர்வத்துடன் அய்யப்பனுக்கு பிடித்த கருப்பு சட்டை,வேட்டியையும் பக்தர்கள் அணிந்து வந்தனர்.