குஜராத்: முதல்வர் குபேந்திரன் பட்டேல் தலைமையிலான குஜராத் அரசு 3.01 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
இதில் மாநில மக்களுக்கு புதிய வரி ஏதும் விதிக்கப்படவில்லை. குஜராத் மாநில நிதியமைச்சர் கணு தேசாய் 2023-2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். முதல்வர் பூபேந்திரன் பட்டேல் தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும் இதில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது இது பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் ஆகும்.
காப்பிட்டு வரம்பு ரூபாய் 10 லட்சம் ஆக உயர்வு…….. பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது பிரதான் மந்திரி ஜென் ஆரோக்கிய அமிர்த யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு காப்பிட்டு வரும்போது 10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு இரண்டு சிலிண்டர் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உள்நாட்டு உற்பத்தியை 42 லட்சம் கோடியாக உயர்த்த திட்டம்!! குஜராத் மாநில அரசின் உள்நாட்டு உற்பத்தியை 42 லட்சம் கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தேசாய் தெரிவித்துள்ளார். மேலும் குஜராத்தின் உள்கட்டமைப்பு வசதிக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் அதிவேக சாலைகள் அமைக்கப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.