சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு , அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்து வந்த விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையை அளித்து உள்ளனர்.
அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார், அதில் தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றுப்படுவதாக தேர்தல் அறிக்கைகளில் தெரிவித்திருப்போம். அதை நிறைவேற்றும் வகையில் தான் எனது செயல்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி மைதானம் என்ற வாக்குறுதிகளையும் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றுவேன் என்றார்.
இதுபோன்று பல கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர், சினிமாத்துறையில் மாரி செல்வராஜ் உடன் செயலாற்றி வரும் மாமன்னன் திரைப்படமே எனது கடைசிப் படம் , இனிமேல் நடிக்கப்போவதில்லை என்றார். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த திரைப்படத்தையும் என்னால் நடித்து தர முடியாத சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. என்னால் முடிந்த வரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயலாற்றுவேன் எனக்கூறி தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறிச்சென்றார்.