கடும் மூடுபனி காரணமாக ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் கார் விபத்துக்குள்ளானது.
ஹரியானாவின் அக்ரோஹா என்ற இடத்தில் ஹிசாரில் இருந்து சிர்சாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் கார் மற்றோருக்கு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
சாலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக அவரது வாகனம் , அவரின் மற்றொரு காதுகாப்பு வாகனத்தின் மீது மோதியது. துணை முதல்வர் காயமின்றி தப்பிய நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்
ஹரியானா காவல் துறையினர் கான்வாயை வழி நடத்திச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் உயிரிழப்போ, பலத்த காயமோ எவருக்கும் ஏற்படவில்லை.