பிரான்ஸில் 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ் ஒன்று பிடிபட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையதலங்களில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸில் உள்ள ஏரியில் சுமார் 30 கிலோ எடையுள்ள கோல்டு பிஷ் ஒன்று பிடிபட்டுள்ளது. உலகில் இதுவரை யாரும் பிடிக்காத இந்த வகை மீனை, பிரிட்டனை சேர்ந்த அண்டி ஹக்கெட் என்பவர் பிடித்துள்ளார். இந்த மீனுடன் அவர் புகைப்படம் எடுத்து கொண்ட பின்னர் மீண்டும் ஏரியில் அதனை விட்டுவிட்டார்.
புளூவோட்டர்ஸ் எனப்படும் அந்த ஏரியில் ஒரு பெரிய கோல்ட் பிஷ் இருப்பதை ஏற்கெனவே பலருக்கு தெரிந்துள்ளது. இந்த மீனுக்கு கரட் என்றும் பெயர் வைத்துள்ளனர். இந்த மீன் இனம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
‘இந்த மீன் தொடர்ச்சியாக வளர்ந்து வந்தது. ஆனால், அது அடிக்கடி வெளியில் வருவதில்லை’ என அண்டி ஹக்கெட் கூறியுள்ளார். இந்த மீன் இங்கு இருப்பது தெரியும் ஆனால் அதை நான் பிடிப்பேன் என எண்ணியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த மீன் தான் உலகிலேயே அதிக எடை கொண்ட கோல்டு பிஷ் என தெரியவந்துள்ளது.