தமிழகத்தில் வழங்கப்பட்ட கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 2 வருடம் கட்டுமானத்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
01.04.2014 முதல் 31.03.2022 வரையிலான காலகட்டத்தில் திட்ட அனுமதி வழங்கப்பட்ட கட்டிடங்களுக்கான அனுமதியின் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அரசிதழும் வெளியிடப்பட்டுள்ளது
2019ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகளின்படி, கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதி மற்றும் கட்டட உரிமத்துக்கான காலம், ஐந்து ஆண்டுகள் ஆகும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடியாத நிலையில், அந்தத் திட்ட அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.