அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சைகள் இன்றளவும் நீடித்துக்கொண்டே வருகிறது. இதில் ஓபிஎஸ் தரப்புக்கும், இபிஎஸ் தரப்பும் தொடர்ந்து மோதல்கள் இருந்த வண்ணம் தான் உள்ளது.
இதனிடையே இபிஎஸ் தரப்பு அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மீது பல வழக்குகளை தொடர்ந்திருந்தது, இதற்கு பதிலடி தரும் பொருட்டி ஓபிஎஸ்ஸும் பல வழக்குகளை இபிஎஸ் மீது தொடுத்து வந்தார். இருப்பினும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணை மட்டும் தள்ளிப்போகிக்கொண்டே வந்தது.
இந்நிலையில் இபிஎஸ் தற்போது ஒபிஎஸ் மீது மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அவை என்னவென்றால் ஒபிஎஸ் தரப்பு நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்தக்கூடாது என முட்டுக்கட்டை போட்டு வருகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தையும் காரணம் காட்டி கட்சியில் யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து செயல்பட்டு வருவது ஏற்புடையதாக இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.