தமிழ்நாடு உட்பட பல நாடுகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த பணிகளுக்காக , சிறப்பு முகாம்களும் போடப்பட்டு வந்தனர். இதற்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை , வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது போன்ற திருத்தங்களுக்காக 1 லட்சம் அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட தேதி இன்றுடன் நிறைவடைய உள்ளது. எனவே இதுவரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யாதோர், உடனடியாக மனு அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தரப்பில் கேட்டு கொண்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதால் , அவையனைத்தையும் பரிசீலித்து வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு ஜனவரி 3 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வருகிற ஜனவரி மாதம் வெளியிடப் பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.