மதுரையில் சாலை பணிக்காக வருகின்ற 24ம் தேதி (இன்று) ஒரு நாள் மட்டும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது
மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் அமைந்துள்ள கோகலே ரோடு (வடகரை பகுதியில் NHAI நிறுவனம் மூலம் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது) கட்டுமான பணி நடைபெறும்போது அங்கு செல்லும் பிரதான குடிநீர் மெயின் பழுது ஏற்பட்டுள்ளது.
பழுது சரிபார்க்கும்வரை கோகலே ரோடு, செல்லூர் , புதூர் பகுதிகள், அருள்தாஸ்புரம், விஸ்வநாதபுரம், ரிசர்வ்லைன் பகுதிகள், குலமங்கலம் ரோடு, ரேஸ் கோர்ஸ் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்று ஒரு நாள் மட்டும் பாதிப்பு அடையும்.
பழுது நீக்கியவுடன் குடிநீர் விநியோகம் நாளை முதல் சீராக வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது