26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CovidCrimeDistrictsElectionIndiaNewsPoliticalPuducherrySrilankaTamilnadu

புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்தநாள்! – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்!

அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகம் அலங்கரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே அதிமுக அலுவலகத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் அவர்களின் உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஏழை எளியோர் பசிதீர்த்த வள்ளல், இடஒதுக்கீட்டை 49% இருந்து 68% ஏற்றிய சமூகநீதி காவலர்,
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
நம் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகழை போற்றி,தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.

See also  நெருங்குகிறது புயல் - அலாட் ஆகும் துறைமுகங்கள் !

மேலும் கலங்கரை விளக்கமாக தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் கொடுத்த சரித்திர நாயகர் என அவர் பெருமையை எடுத்துரைத்து பதிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Related posts