புதுச்சேரியில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அவ்வப்பொழுது அவர் பேசியதாவது, கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி, திராவிட இயக்கத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையில் நேரடி தொடர்பு தான் இருந்து வருகிறது.எனவே புதுச்சேரி வேறு தமிழ்நாடு வேறு என பிரித்து பார்க்க முடியாது என்றார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் ஆளுநரையே ஆட்டி படைக்கும் வகையில் தான் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது, இதனை பார்க்கும் பொழுது புதுச்சேரிக்கும் தமிழ்நாடை போல திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது என தோன்றுகிறது. இதனடிப்படையில் நிச்சயம் ஒரு நாள் புதுச்சேரியில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி உருவாகும் , இது குறித்து தேர்தல் நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் நமக்குள் போட்டிகள் இருக்கலாமே தவிற பொறாமைகள் இருக்கக் கூடாது என்றார். காரணம் என்னவென்றால் புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மக்களுக்கானது அல்ல , ஆகவே திராவிட மாடலின் தேவை தற்போது புதுச்சேரிக்கு தேவைப்படுகிறது என குறிப்பிட்டிருக்கிறார்.