சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். அதில் பேசிய அவர் , தமிழ்நாட்டில் வேண்டுமானால் நாங்கள் சாதரணமான நபராக இருக்கலாம் .
ஆனால் எங்கள் அனைவரையும் உருவாக்கிய இயக்கம் என்பது திமுக தான் , அக்குடும்பத்தின் தலைவரான கருணாநிதி அவர்களால் தான் . அதுமட்டுமல்லாது எண்ணற்ற நாடளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கியிருப்பதும் திமுக தான். எனவே அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு நாங்கள் விசுவாசமாக இருக்க முடியும். உதயநிதி அல்ல , அவரது மகன் வந்தாலும் இது போன்று தான் வரவேற்போம் வாழ்க எனச் சொல்லுவோம். அது தான் எங்களுடைய எண்னமாக இருக்கும், வாரிசு எனக்கூறி நீங்கள் யாரும் எங்களை மிரட்டிவிடவே முடியாது என்றார்.